2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘நிறைவேற்று அதிகாரத்துக்கு உரியதல்ல’

Princiya Dixci   / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கை,  சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான பொறுப்பு சபாநாயகருக்கே இருக்கிறது. இதுவே சரியான செயன்முறையாகும். இது நிறைவேற்று அதிகாரத்துக்கு உரியதல்ல” என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

   மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றிய கோப் குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“விசாரணை நடத்தப்பட்டு, கோப் குழுவானது நாடாளுமன்றத்துக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கே இருக்கிறது. அது ஜனாதிபதிக்குரிய விடயம் கிடையாது” என்றார்.  

“எவ்வாறிருப்பினும், மத்திய வங்கியின் இந்த பிணைமுறி விவகாரம் தொடர்வில் விசாரித்து தகுந்த நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதனை நான் பாராட்டுகின்றேன்.  

இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி செயற்பட்டிருந்தார். ஆனால், பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் இன்னும் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. கோப் குழு அறிக்கையில் நானும் கையொப்பமிட்டுள்ளேன். யாரேனும் தவறிழைத்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .