Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
“கிளிநொச்சி, இரணைதீவுக்கு மதவழிபாடுகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளின் நிமித்தம் செல்பவர்கள் கடற்படையினரால் தடுக்கப்படுகிறார்கள் எனின், அவை தொடர்பில் அறியப்படுத்துமாறு” பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (08) கேட்டுக்கொண்டார்.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, ஆகியோரை உடனடியாகத் தொடர்பு கொண்டு, கலந்துரையாடுமாறு பணித்தார்.
பிரதமரிடம் இருந்து நேரடியான பதில்களைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 26 ஆண்டுகளாகியும் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று மீள்குடியேற முடியாமல் இருப்பது தொடர்பில் சிறிரதன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிகளையும் அதேபோல், கடல்மார்க்கமான போதைப்பொருள் கட்டத்தல்களையும் தடுப்பதற்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இரணைதீவு முக்கியமான ஸ்தானமாக இருப்பதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
“கிளிநொச்சி மாவட்டம், இரணைதீவில் குடியிருந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 430 பேர் 1990-92ஆம் ஆண்டு காலப் பகுதியில் அங்கிருந்து வெளியேறினர். அப்போது இடம்பெற்ற யுத்தம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அவர்கள் அனைவரும் பூநகரி பிரதேச செயலாளர் ஊடாக இரணைமாதா நகர், நாச்சிக்குடா, அம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் மாற்றிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரணைதீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. சுதந்திரமாக வாழ்வாதார செயற்பாடுகளை அங்கு முன்னெடுக்க முடியும்.
அது மாத்திரமன்றி, இரணைதீவில் சுமார் 10 ஏக்கர் தென்னங்காணிகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் தமது காணிகளுக்குச் சென்று தங்கியிருந்து காணிகளை பராமரிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இரணைதீவில் செபமாலை மாதா கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு சென்று வழிபாடுகளை நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை. வருடாந்தத் திருவிழா உள்ளிட்ட விசேட தினங்களில் குறித்த தேவாலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளும் பாதுகாப்புத் தரப்பினரால் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளை தடுப்பதற்கும் கடல்மார்க்கமான போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கும் முக்கியமான இடமாக இரணைதீவு காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இங்கிருந்த மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. போதைப்பொருட் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக இப்பகுதி முக்கியமான இடமாக அமைந்துள்ளது” என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago