Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த படகுகளில் பல சேதமடையும் நிலையில் உள்ளதால் அதனை விடுவிக்க தீர்மானித்தோம்’ என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கான விடையளிக்கும் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் போது அவர்களுடைய படகுகளை கைப்பற்றும் செயற்பாடு வழமையான ஒன்றாகும். எனினும் இந்திய அரசின் கோரிக்கைக்கு அமைய இந்த படகுகள் கடந்த ஆட்சிவரை விடுவிக்கப்பட்டன.
‘எனினும், இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு காரணமாக இனி அவர்களுடைய படகுகளை விடுவிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்தது.
‘எனினும், இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் படகுகளை நாங்கள் விடுவிக்கவில்லை.
‘இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். சேதமடைந்த படகுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை ’ என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago