Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
“வடக்கில், தொல்பொருளியல் திணைக்களத்துக்கு உரிய விகாரைகள் 131 உள்ளன” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்றத்தில் நேற்று (03) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் -06, கிளிநொச்சியில்-03, முல்லைத்தீவில்- 67,மன்னாரில்-20, மற்றும் வவுனியாவில் -35 என, மொத்தமாக 131 விகாரைகள், தொல்பொருளியல் திணைக்களத்துக்குரிய விகாரைகள் ஆகும்.
இந்த விகாரைகளை புதையல் திருடர்கள் மற்றும் அல்லது திட்டமிட்டு இயங்கும் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பொலிஸ் அவசர பிரிவுக்கு 119 என்ற தொலைபேசி இலக்கம் இருப்பதைபோல, தொல்பொருளியல் திணைக்களத்துக்கும், அவரச தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago