Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'சபாநாயகரின் அக்கிராசனத்தை நான் பாதுகாத்துகொள்வேன். அதைப்பற்றி நீங்கள், கவலைப்படத் தேவையில்லை. அந்த அக்கிராசனத்தை விட்டுக்கொடுக்க நான் தயார்' என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்;.
இந்தக் கதிரை விவகாரத்தை விடவும் நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவைத் தொடர்பில் கவனஞ் செலுத்துமாறு அறிவுரை வழங்கிய சபாநாயகர், நாடாளுமன்றத்தை எவ்வாறு நிர்வகிக்கவேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும் அதன்பிரகாரமே செயற்படுகின்றேன் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22), பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான வசந்த அலுவிஹார, 'சபாநாயகரின் உத்தியோகபூர்வமான அக்கிராசனத்தில், வெளிநபரொருவர் அமர்ந்திருந்தமை தொடர்பில் செய்திகளை எழுதிய ஊடகவியலாளர்கள் இருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளினால் அவ்வாறு அச்சுறுத்த முடியாது. அக்கிராசனம் விவகாரம் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன?' என்று வினவினார்.
இதனிடையே எழுந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,
'சபாநாயகரின் ஆசனத்தில், சாதாரண நபரொருவர் அமர்ந்த விவகாரம் தொடர்பில் செய்திகளை வெளியிட்ட நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவர், அதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு யாருக்கும் அச்சுறுத்த முடியாது. அவை தொடர்;பில் அவதானம் செலுத்தவும், ஊடக தணிக்கைக்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்படுகின்றதா?. நாடாளுமன்றத்துக்குள் இடம்பெறும் பல்வேறான சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுகின்றனர்.
இந்நிலையில், அதிகாரிகளினால் அச்சுறுத்தப்படுவது மிகவும் பயங்கரமானது. இது ஊடகவியலாளர்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடப்படும் செயற்படாகும். ஆகையால் அவை தொடர்பில் அவதானம் செலுத்துதல் வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
இவற்றுக்கு பதிலளித்த சபாநாயகர் கருஜய சூரிய, என்னுடைய ஆசனத்தை நான் பாதுகாத்துகொள்கின்றேன். இந்தப் பிரச்சினையை விடவும் நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவைத்தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், இந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
2 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Sep 2025