Menaka Mookandi / 2016 நவம்பர் 23 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
2014ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும், 250க்கு மேற்பட்ட அரச நிறுவனங்கள் நட்டமடைந்திருந்தன. இதனூடாக, 600 பில்லியன் ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட தகவலை பிரதியமைச்சர் வெளியிட்டார்.
அத்துடன், மேற்படி நிறுவனங்களில் நட்டங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்களை தேடிப்பார்க்கின்றோம் என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025