2024 மே 18, சனிக்கிழமை

‘இராமர் பாலம் இல்லை’

Princiya Dixci   / 2017 மே 03 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“இலங்கைக்கும் இந்தியாவும் இடையில் பாலமொன்றை அமைப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. பாலமொன்றை அமைக்கும் எதிர்பார்ப்பு இந்தியாவிடம் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து, அதன் தேவைப்பாட்டுக்கு அமைய, எதிர்காலத்தில் முடிவெடுக்கப்படும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினருமான உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். 

முன்னதாக,”கடந்த வாரத்தில் இந்தியாவுக்குச் சென்ற பிரதமர் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க வேண்டும்”,  அத்துடன் “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பேசியதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி, தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது குறித்து தெளிவுபடுத்துங்கள் என்றார். 

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், தம்புள்ளை, திருகோணமலை நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. 

இந்தியா - இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுக்கு நீண்ட காலமாக எண்ணம் உள்ளது. இதனை பல முறை இந்தியா முன்வைத்துள்ளது. 

எனினும், இராமர் பாலத்தை அமைப்பது குறித்து நாங்கள் தீர்மானிக்கவில்லை. எதிர்காலத்தில் அது தொடர்பான எண்ணத்தில் மாற்றம் ஏற்படலாம். எனினும், தற்போது அவ்வாறான நிலைப்பாடு இல்லை . 

எமது வீதிகளை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதனையே இப்போது நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .