2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

13 ஊடகவியலாளர்கள் படுகொலை

Kanagaraj   / 2016 நவம்பர் 19 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

2006 ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில், அரசாங்கம் இன்றுச் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு அவ்வமைச்சின் அமைச்சர் சாகல ரத்னாயக்க பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் 13 ஊடகவியாலர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை, 87 ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஊடகவியலாளர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் பதிலளித்தார்.

இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் ஐந்து ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .