2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘ஐயப்பன் யாத்திரிகர்களுக்கு விசேட சலுகை வேண்டும்’

Thipaan   / 2016 நவம்பர் 24 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

இஸ்லாமியர்கள், மக்காவுக்கு யாத்திரை செல்லும்போது விசேட சலுகை வழங்கப்படுவதுபோல இந்து பக்தர்கள், சபரிமலைக்கு யாத்திரை செல்லும் போது, அவர்களுக்கு விசேட சலுகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, ஒன்றிணைந்த எதிரணி கேட்டுக்கொண்டது.  நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, பெருந்தோட்டக் கைத்தொழில் உள்ளிட்ட அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. 

அதில், விவாதத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதியமைச்சர் லக்‌ஷ்மன் வசந்த பெரேரா உரையாற்றிக்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அச்சந்தப்பத்தில் அவையில் இருந்தார்.  

இதன்போது, அவைக்குள் நுழைந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, “மலையகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்திய சபரிமலைக்கு யாத்திரை செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மக்காவுக்கு யாத்திரை செல்லும்போது விசேட சலுகை வழங்கப்படுவதுபோல, இந்த ஐயப்பன் பக்தர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி, இச்சபையில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் விடுக்கின்றேன்” என்றார். 

“பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினூடாக ஜனாதிபதி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .