Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2016 நவம்பர் 26 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணக்காளர் தெரிவுக்கான விண்ணப்பங்கள் கொடுத்துள்ளன. 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு 10 நாட்கள் மட்டுமே இருக்கின்றவர்கள் சிரமம்படுகின்றனர். ஆகையால், அந்த விண்ணப்பத்துக்கான திகதியை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிர்வாக பிரச்சினைகளை நீங்களும் உங்களுடைய அமைச்சின் அதிகாரிகளும் அறிந்துள்ளீர்கள். ஆகையால், எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பீர்கள் என்று நம்புகின்றேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் சுத்திரிப்பு ஊழியர்கள் பல நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் கோரியே அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு கொடுத்த உத்தரவாதத்துக்கு அமைய, பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கோட்டுக்கொள்கின்றேன். இவர்களின் பிரச்சினைகளை பணிநிலைய ஆணைக்குழுவின் ஊடாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக கணக்காளர் தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்துக்கான இறுதி திகதி குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று 5 வருடங்கள் நிறைவடைவதற்கு 10 நாட்களே இருக்கின்றன.
இந்த 10 நாட்களினால், 5 ஆண்டுகள் நிறைவு செய்யமுடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர் கணக்காளர் வெள்ளிடங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூடுதலாக இருக்கின்றன.
ஆகையால், விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதியை இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்கு நீடிக்குமாறும் அதற்கான அறிவித்தலை உடனடியாக கொடுத்தால்தான் அவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago