George / 2017 மே 26 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“எந்தப் பதவியையும் நான் இதுவரை கேட்டு வாங்கியதில்லை. அவ்வாறு கேட்கவும் மாட்டேன், கேட்டும் பழக்கமில்லை” என தெரிவித்த நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, என்மீது சேறு பூச முடியாதவர்கள் இவ்வாறான செய்திகளை பரப்புகின்றனர்’ என்றார்.
புத்திரிகையில் வெளியான செய்திகுறித்து மறுப்புத் தெரிவித்து நாடாளுமன்றில் நேற்று (25) உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில். “திரைப்படக்கூட்டுதாபனம், அரச அச்சகம் உள்ளிட்ட மூன்று விடயங்களை எனது அமைச்சின்கீழ் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
“நான் அப்படி எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை. எந்தவொரு செய்தியையும் வெளியிடமுன்னர். அதை உறுதிப்படுத்தி வெளியிட்டால் நன்று. காணி அமைச்சை விரும்பியே ஏற்றேன். இதன்மூலம் நாடெங்கும் சென்று மக்களுக்கு சேவையாற்றக்கூடியதாக இருக்கும். பதவிக்காக அலைபவன் நான் அல்ல” என்றார்.
3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025