2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' திட்டத்தில் 3,608 முறைப்பாடுகள் கிடைத்தன

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-அழகன் கனகராஜ்

ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையில் ஜனாதிபதி செயலகத்தில் அமுல்படுத்தப்படும் 'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' எனும் திட்டத்தின் கீழ், கடந்த 9 மாத காலத்தினுள் 3,608 முறைப்பாடுகள் பெறப்பட்டு, அவற்றில் 796 பிரச்சினைகள் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,812 முறைப்பாடுகள் விசாரணை மட்டத்தில் உள்ளன என்று சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

 

நாடாளுமன்றத்தில் இன்றுத் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ள விவரங்களின் சுருக்கம் பின்வருமாறு,

24 மணிநேரமும் செயற்படுகின்ற 118 அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக,  கடந்த 9 மாத காலத்தினுள் கிடைத்த 38,553 முறைப்பாடுகளுக்காவும் சடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அலுவலர்களுக்கு நிவாரணமளித்தல் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கான மூவரடங்கிய குழுவின் முன் 37 அலுவலர்கள் நேர்முக விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

அதில் 129 பேர் அரசியல் ரீதியான அநீதிக்குட்பட்டதாக விதந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .