Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
தோட்ட மக்களுக்கு முழுமையாக வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியாவிட்டாலும் விரைவில் அவர்களை வீடுகளுக்கு உரிமையாளராக்குவோம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (03) இடம்பெற்ற, பிரதமரிடம் கேளுங்கள், கேள்வி நேரத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியான, வேலுகுமார் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
முன்னதாகக் கேள்விகளைக் கேட்ட வேலுகுமார் எம்.பி, “அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் அரச பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வகின்றனர். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் உள்ள மேற்படித் தோட்டங்களில் இவ்வாறான நிலைமைகள் கூடுதலாகவே காணப்படுகின்றது” என்று சுட்டிக்காட்டினார்.
அக்கேள்விகளுக்குப் பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், “தோட்ட மக்களைக் காணி உரிமையாளர்களாக்குவதற்கு அவர்களுக்கு காணி உரிமையை வழங்க தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு உரிய அமைச்சர்கள், இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. சில தோட்ட நிறுவனங்கள் நல்ல இடங்களை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளன.
“இந்த அரசாங்கம், எந்தவொரு விடயங்கள் தொடர்பிலும் தனித்து முடிவெடுக்காது. அதேபோல, பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் தனித்து முடிவெடுக்காது.
“அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பெருந்தோட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்தே இறுதியாக முடிவு எடுக்கப்படும்” என்றார்.
3 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025