Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ. ஜோர்ஜ்
“வடக்கில் கஞ்சா, போதைபொருள் கடத்துபவர்களை கைதுசெய்வதாக கூறி, பொலிஸாரின் படங்களையே வெளியிடுகினறனர். அவ்வாறென்றால் பொலிஸார் மற்றும் கடற்படையினரா போதைபொருள் கடத்துகின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோரின் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றிய இடங்களில் பலவற்றை விடுவிக்க மறுக்கும் படையினர், யுத்தம் இல்லாத நிலையிலும் அங்கு நிலைகொண்டுள்ளனர். எனினும், போதைப்பொருட்களை கடத்துவதால், படையினரை அவ்விடங்களிலிருந்து விடுவிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
வடக்கில் கேரள கஞ்சா மற்றும் கசிப்பு உற்பத்தி என்பவை தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களின் படங்களை வெளியிடாமல் பொலிஸாரின் படங்களே வெளியிடப்படுகின்றனர். மேலும் கடல்வழியாக கஞ்சா கடத்தப்படுவதாகக் கூறி கடற்படையினரே கைதுசெய்கின்றனர்.
குற்றத்தில் ஈடுபடுபவர்களின் படத்தை வெளியிடாமையால் கடற்படையினர், பொலிஸார் ஆகியோரா கஞ்சா கடத்துகின்றனர் என்று கேள்வியெழும்புகின்றது.கஞ்சா, கசிப்பு ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கட்டுபடுத்த நீதிமன்றத்துக்கு முடியாதுள்ளது.
மேலும், வடக்கில் கஞ்சா கடத்தப்படுவதால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், வடக்கில் இவ்வாறு பாரியளவில் கஞ்சா கடத்தல்கள் இடம்பெறுவதாக இருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்குபுனர்வாழ்வளிக்க புனர்வாழ்வு நிலையங்கள் யாழில் உள்ளனவா? ஏன் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago