George / 2017 மே 05 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது யார் என்பதை மஹிந்த தரப்பு அறிவித்தால், விடுதலைப் புலிகளுக்கு கீழ்படியுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்ட அரசியல் தலைவர் யார் என்பதை அறிவிக்கின்றேன“ என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
அத்துடன், 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கருணா அம்மானே கட்டளை வழங்கினார்“ என்றார்.
வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக, '1999களில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு உயர் மட்டத்தில் இருந்து வந்த கட்டளைகளினால் விடுதலைப்புலிகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், பொலிஸ் அதிகாரிகள் பலர் கொலை செய்யப்பட்டதுடன், மிகுந்த சிரமங்களுக்கும் உள்ளாகினர். இவ்வாறு கொலை செய்யவதற்கு காரணமாக இருந்த குறித்த கட்டளை அதிகாரி யார் என்பதை அடையாளம் கண்டுள்ளீர்களா?' என பத்ம உதயசாந்த எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன்போது, 'கொலைகளுக்கு கட்டளையிட்டது கருணா அம்மானே' என ஆளும் தரப்பு எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
இதன்போது அமைச்சர் சாகல ரத்னாயக்க, 'இந்தக் கேள்விக்கான பதிலை கடந்த ஆட்சியில் உங்களுடன் அமைச்சுப் பதவிகளை பெற்று ஒன்றாக இருந்த கருணா அம்மானிடம் கேட்டிருக்க வேண்டும். அவரே அனைத்துக்கும் பொறுப்பானவர்' என்றார்.
3 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025