Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'மனிதர்களை பச்சை, பச்சையாக கொன்றொழித்து, அவர்களின் தொடைகளை இறைச்சியாக்கி, கொல்லப்பட்டவர்களின் தாய் மற்றும் தந்தையினருக்கு ஊட்டியோரே கலாசாரம் பற்றி இன்று பேசுகின்றனர்' என்று கலாசார பிரதியமைச்சர் பாலித தெவரபெரும தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'கலாசார பிரதியமைச்சர் பதவிக்கு நான் தகுதியில்லை என்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டினார். 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சிக்கு பொறுப்பானவர்களே என்னுடைய கலாசாரம் பற்றி பிரஸ்தாபிக்கின்றனர்.
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 11 பேரை, அக்குழுவினரே கொன்றொழித்தனர். உயிருக்காக துடித்துடித்துகொண்டிருந்த தேரரை, கயிற்றோடு கட்டிவைத்து சுட்டுபொசுக்கியவர்களே இன்று கலாசாரம் பற்றி பேசுகின்றனர்' என்று அவர் கூறினார்.
மேலும், 'பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்திருப்பதற்கு அக்குழுவினரே பொறுப்பு கூறவேண்டும். தொழிற்சாலைகளை எரித்தனர். அந்தக் கைதொழிலை கட்டியெழுப்பமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை எரியூட்டினர். அந்தத் தொழிற்றுறையையும் இன்னும் கட்டியெழுப்ப முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டிய அவர், 'மனிதர்களை கொன்றொழித்து, அவர்களின் சதைகளை இறைச்சியாக்கியோரே கலாசாரம் பற்றி பேசுகின்றனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago