2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

187 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனை குறைப்பு

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

2015 டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல், 2016 மே 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 187 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையானது, ஆயுள் தண்டனை வரையிலான சிறை தண்டனையாக தளர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்று, நீதியமைச்சு தெரிவித்தது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், செப்டெம்பர் மாதம் வரையிலான அமைச்சின் முன்னேற்ற அறிக்கை, நாடாளுமன்றத்தில் இன்றுத் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. அதிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையாக தளர்த்துவதற்காக பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு, 2013.09.26ஆம் திகதியின் போது, சகல வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டுகள் முடிவடைந்து மரணதண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக ஆராய்ந்தப் பார்த்து, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவது, இக்குழுவின் மூலம் செய்யப்படுகிறது.

ஜனாதிபதியிடம் அரசியலமைப்பின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் மீது மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்கு கீழ்கண்டவாறு மூன்று தடவைகளில் ஆயுட்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .