2024 மே 18, சனிக்கிழமை

‘யார் யாரென பட்டியல் இடுங்கள்’

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 04:33 - 3     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“இரட்டைப் பிரஜாவுரிமையுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார் என்பது பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்” என்று, ஜே.வி.பி எம்.பியான விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார். 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபரொருவர் எம்.பி. பதவிக்கு தெரிவாக முடியாது. ஆகையால், அந்த தகவல்களைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென கோரிநின்றார். 

நாடாளுமன்றத்தில் நேற்று( 04) இடம்பெற்ற கம்பனிகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிநின்றார்.  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பதால் அவர் எம்.பி.யாக பதவி வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்;ப்பளித்துள்ளது.  

‘எனினும், ஆளும் கட்சியில் அமைச்சுப் பொறுப்பில் உள்ளவர்கள் இரட்டை பிரஜாவுரிமையுடன் இருப்பதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார். அவர் மாத்திரமன்றி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். அப்படியாயின் அவர்கள் யார் என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.  

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் கீதா குமாரசிங்கவுக்கு ஒரு சட்டமும் ராஜபக்ஷ குழுவினருக்கு இன்னுமொரு சட்டமும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டம் இருக்கவே முடியாது” என்றார்.  


You May Also Like

  Comments - 3

  • K.mary Sunday, 25 November 2018 07:16 AM

    Super

    Reply : 0       0

    Kumar Sunday, 25 November 2018 07:17 AM

    It is truy

    Reply : 0       0

    Saravanan Tuesday, 12 February 2019 12:03 PM

    Super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .