2025 மே 16, வெள்ளிக்கிழமை

2 விசேட குழுக்கள் நியமனம்

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

இரண்டு முக்கிய நாடாளுமன்ற குழுக்கள், நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதுடன,; அக்குழுக்களின் உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில், இன்று வியாழக்கிழமையன்று சபாநாயகரின் அறிவிப்பின் போதே, சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

அதனடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு, அமைச்சர் தலதா அத்துகோரால, தலைமையில் நியமிக்கப்பட்டது.

இதேவேளை, நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல மீதான நாடாளுமன்ற தெரிவுக்குழு, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, தலைமையிலேயே நியமிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .