Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணப் பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனூடாக அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பொலிஸ் சேவைக்கான ஆளணி உள்வாங்கப்பட்டு, பணிகளில் அமர்த்தப்படுவதன் ஊடாக அந்தந்தப் பகுதிகளின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவது இலகுவாக அமையும்.
அத்துடன், தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவதற்கும், தொழில் வாய்ப்பின்மையை ஓரளவு குறைப்பதற்கும், சமூக ஒழுக்கங்களைப் பேணுவதற்கும் இயலுமாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், தேசிய பொலிஸ் ஆணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் என்பன இந்த ஆணைக்குழு மூலம்தான் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது பற்றிய தெளிவுகள் தேவை. ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் மொழிகளில் பணியாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகமாகப் பணியில் அமர்த்தப்படுவது அவசியமாகும் என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொமி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago