2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

‘வடக்கில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னைய அரசாங்கத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கு எம்மால் பொறுப்பு கூறமுடியாது. எனினும், வடக்கில் எந்தவொரு வன்முறையும் மீண்டும் உருவாவதற்கு இனிமேலும் இடமளிக்கமுடியாது என்று அரசாங்கம், நேற்றுப் புதன்கிழமை திட்டவட்டமாக அறிவித்தது.  

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான நான்காவது நாள் விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
எம்.பியான எஸ்.ஸ்ரீதரன் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.   

அவரது உரைக்கு குறுக்கீடு செய்து கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் ஜோன் அமரதுங்க, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   
 

“சிறிதரன் எம்.பி. மிகவும் உணர்ச்சிகரமாக இந்த விவாதத்தில் உரையாற்றும் போது பேசினார். எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய இணக்கப்பாட்டு அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றி இணைப்பதில் நியாயபூர்வமான முன்னெடுப்புகளை உறுதிசெய்யும். அனைத்து விடயங்களிலும் நாம் நியாயபூர்வமான செயற்பாடுகளையே மேற்கொள்வோம்.   

வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.  

முன்னைய அரசாங்கம் இழைத்த செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது. ஆனால், அவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது. தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நாம் செயற்பாடுவோம். அமைதியான முறையில் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .