Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 08 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அக்கிராசனத்தை அச்சுறுத்தி, விரல் நீட்டி அழுத்தம் பிரயோகித்து, தீர்மானங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, பல தடவைகள் நேற்று (07) சுட்டிக்காட்டினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் பெயரை கூறியே, சபாநாயகர் மேற்கண்டவாறு எச்சரித்தார்.
இதேவேளை, அவருடைய பெயரை குறிப்பிடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் சபாநாயகர் எச்சரித்தார்.
“நாடாளுமன்றம், பிரதேச சபையல்ல. அது அதி உயரிய பீடமாகும். சபையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும்” என்றும், சபாநாயகர் கரு ஜயசூரிய, ஒன்றிணைந்த எதிரணி குழுவை பார்த்து கடுமையான தொனியில் எச்சரித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தன, எழுப்பியிருந்த கேள்விக்கு, சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்து கொண்டிருந்த போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் இட்டமையால், ஏற்பட்ட சர்ச்சையை அடுத்தே, சபாநாயகர் மேற்கண்டவாறு எச்சரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago