2025 மே 16, வெள்ளிக்கிழமை

அண்ணனை வீட்டுக்கு அனுப்புவேன்: தம்பி சூளுரை

Kanagaraj   / 2016 நவம்பர் 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யான மகிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவேன் என்று அவரது சகோதரான ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி.யான ஆனந்த அளுத்கமகே வெள்ளிக்கிழமை சபையில் சூளுரைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணி அமைச்சு மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஆனந்த அளுத்கமகே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தல் தொகுதிவாரி முறையில் நடைபெறவிருக்கின்றமையால் நாவலப்பிட்டிய தொகுதியில் மகிந்தாந்த அளுத்கமகேவை தாம் தோற்கடிக்க செயற்படுவேன் என்று அவர் தெரிவித்தார்.

'கடந்த பொதுத் தேர்தலில் 12 ஆயிரம் மேலதிக வாக்குகளினால் நான் வெற்றிபெற்றேன். எதிர்வரும் தேர்தல் தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறவுள்ளது. ஆகவே, மகிந்தானந்தவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவேன். அவர் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பல மோசடிகளில் ஈடுபட்டார். அவர் திருடர் என அவரது மனைவியே பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார் என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .