2025 மே 15, வியாழக்கிழமை

அமைச்சர்கள் பலருக்கு இரட்டை பிரஜாவுரிமை: ஜே.வி.பி குற்றச்சாட்டு

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

'அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களுக்கு, இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது' என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்

நாடாளமன்றில் நேற்று இடம்பெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

'சுவிட்ஸர்லாந்து நாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர் என்பதற்காக கீதா குமாரசிங்க, நாடாளுமனற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலருக்கும் இரட்டை பிரஜாவுரிமை இருக்கின்றது என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், வெளிநாட்டு பிரஜையாக இருந்து கொண்டு இலங்கை பணத்தில் கைச்சாத்திட்டார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது. இவரும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இவ்வாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என பலருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை மட்டும் எப்படி நீக்க முடியும்? இந்த விடயத்தில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .