2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இராணுவச் சின்ன விவகாரம்: அவையில் படம் காட்டினார் எம்.பி

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுவரும் முன்பள்ளியில் சிறார்கள் அணியும் சீருடையில், இராணுவத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்பதைப் புகைப்படங்களை ஆதாரமாக காண்பித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் எம்.பி, அவ்வாறானவர்கள் 15, 16 வயதை அடைந்ததும் துப்பாக்கி ஏந்துவதை யாரால் தடுக்க முடியும் என்றும் அவர் வினவினார்.  

வரவு-செலவுத்திட்டம் மீதான நான்காவது நாள் விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே, படங்களை காண்பித்து உரையாற்றினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

இராணுவத்தினரால் வடக்கில் முன்பள்ளி நடத்தப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக செயற்படும் இராணுவம், ஏன் முன்பள்ளிகளை நடத்த வேண்டும். அரசாங்கம்தான் இதற்கு நிதி வழங்குகின்றது. ஏன் இந்த நிதியை கல்வியமைச்சினூடாக ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது.

இந்த விடயம் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர், சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .