2025 மே 16, வெள்ளிக்கிழமை

கோப் அறிக்கை விநியோகிக்கப்பட்டது

Kanagaraj   / 2016 நவம்பர் 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அர்ஜுனா மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன் குழு (கோப்) மேற்கொண்ட விசாரணையின் முழுமையான அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று காலை கூடிய போது சபாநாயகர் அறிவிப்புகளை விடுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, 13 பாகங்களைக் கொண்ட கோப் குழுவின் மேற்படி முழுமையான விசாரணை அறிக்கை 225 எம்.பி.க்களினதும் மேசைகள் மீது வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இந்த அறிக்கையை அச்சிடும் பணிகளை நிறைவு செய்வதன் நிமித்தம் பல இரவுகளாக கண்விழித்து அர்பணிப்புடன் பணியாற்றியமைக்காக அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 18 மாதங்களாக இடம்பெற்ற நீண்ட ஆராய்வுகளின் இறுதியில் இந்த அறிக்கையானது கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி எம்.பி.யினால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
;

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .