Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2017 மார்ச் 24 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“முஸ்லிம்களின் பாரம்பரிய வணக்கஸ்தலமாகக் காணப்பட்ட திருகோணமலை, கரிமலையூற்றுப் பள்ளிவாசல், முற்றாக உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில், அது அமைந்துள்ள இடத்தையும் படையினரின் பாவனைக்காக சுவீகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற நன்கொடை உறுதிகளை கைமீட்டல், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், குற்றவியல் சட்டக்கோவை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “திருகோணமலை கரிமலையூற்றுப் பள்ளிவாசல் 2015 ஆம் ஆண்டு முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்ட விடயம் கேள்விப்பட்டு அன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் படைத்தரப்பின் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று அதனை பார்வையிட்டனர்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட விவகாரம் அன்றை நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மீளக் கட்டித் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெப்ரவரி 15ஆம் திகதியிடப்பட்டு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேத செயலாளரால் வர்த்தமானி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதில், படையினருக்கு முகாம் அமைப்பதற்காக களப்பின் பேக் குடா (clappenburg) பிரதேசத்தில் உள்ள 4.65 ஹெக்டெயர் நிலப்பரப்பை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரிமலையூற்று, நாச்சிக்குடா பிரிவில் உள்ள குறித்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான எந்த விவரங்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் இல்லை.
முஸ்லிம்களின் பாரம்பரியமான கரிமலையூற்று பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறாறு படையினருக்கு நில சுவீகரிப்பு செய்வது என்பது, நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுத்து செல்வதாக அமையாது. இதனை மிக மோசமான நடவடிக்கையாக நாங்கள் காண்கின்றோம்.
எனவே, இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த விடயத்திலிருந்து பின்வாங்கி மக்களது காணிகளை மக்களுக்கு வழங்குவது சிறப்பான செயற்பாடாக இருக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்கின்றோம் என்றார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “திருகோணமலை கரிமலையூற்றுப் பள்ளிவாசல் 2015 ஆம் ஆண்டு முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்ட விடயம் கேள்விப்பட்டு அன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் படைத்தரப்பின் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று அதனை பார்வையிட்டனர்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட விவகாரம் அன்றை நாட்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மீளக் கட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெப்ரவரி 15ஆம் திகதியிடப்பட்டு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேத செயலாளரால் வர்த்தமானி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதில், படையினருக்கு முகாம் அமைப்பதற்காக களப்பின் பேக் குடா (clappenburg) பிரதேசத்தில் உள்ள 4.65 ஹெக்டெயர் நிலப்பரப்பை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரிமலையூற்று, நாச்சிக்குடா பிரிவில் உள்ள குறித்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான எந்த விவரங்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் இல்லை.
முஸ்லிம்களின் பாரம்பரியமான கரிமலையூற்று பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறாறு படையினருக்கு நிலச் சுவீகரிப்புச் செய்வது என்பது, நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதாக அமையாது. இதனை மிக மோசமான நடவடிக்கையாக நாங்கள் காண்கின்றோம்.
எனவே, இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த விடயத்திலிருந்து பின்வாங்கி மக்களது காணிகளை மக்களுக்கு வழங்குவது சிறப்பான செயற்பாடாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago