2025 மே 16, வெள்ளிக்கிழமை

கலை கற்றால் முன்னேற முடியாது

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

கல்விமுறைமை நகைச்சுவையானது, இளைஞர்கள் அதிகம் ஆனால், அவர்களுக்கு பயற்சியளிப்பதில்லை. வறுமையான இளைஞர்கள் கலையை கற்று முன்னேறுவதில் சிரமம்படுகின்றனர். தொழில்நுட்ப ரீதியில் பயின்றால் மட்டும் முன்னேறமுடியும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. ஆகையால், பல்கலைக்கழகத்துக்கு செல்லமுடியாதவர்களுக்கு உதவியளிப்பது குற்றமா? ஆவ்வாறானவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் பயற்சியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காணி, விவசாயத்துக்கு தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், அதற்காகவே, விவசாய தொழில்நுட்பத்துக்கு 50 சதவீதம் கடன் வழங்குவதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வறுமை கோடுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துசெல்கின்றது. சமூர்த்தி வேலைத்திட்டத்துக்குள் சேரவேண்டியவர்கள் அதில், இணைவதில்லை. அந்தத் திட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாதவர்கள் அதில் இணைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஆகக்குறைவாகும். ஆகையால்தான் வறுமையும் அதிகரிக்கிறது. அதனை நிர்ணயிப்பதில் பெரும் பிரச்சினை இருக்கின்றது.

மூலதன செலவாக கடந்த காலங்களில் பாதுகாப்புக்குதான் ஆகக்கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. யுத்தமொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், நாங்கள் மேலே பார்த்துகொண்டிருக்க முடியாது. தற்போது யுத்தம் நிறைவடைந்துவிட்டது. ஆகையால், மூலதன செலவை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தலாம்.

அபிவிருத்திக்காக கூடுதலான நிதியை செலவழிக்க வேண்டும். தேவையில்லாத உற்சவம், மாநாடு மற்றும் உற்சவங்களை நடத்தப்படுகின்றது. அரச அதிகாரிகளில் பலர் கூடுதலான நேரங்களை அபிவிருத்தி செயற்றிட்டங்களில் செலவழிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த அரசாங்கம் என்னதான் அபிவிருத்தியை மேற்கொண்டாலும் குடும்ப வருமானத்தை பார்த்திருக்க வேண்டும். குடும்ப வருமான குறைகின்றபோது, அரசாங்கத்துக்கு எதிரான சிந்தனைகள் வலுப்பெறும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .