Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாடாளுமன்றத்துக்கு, நேற்று (04) வருகை தந்திருந்தார்.
கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அந்தத் தீர்ப்பு உடனடியாக அமுல்படுத்தப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த 3ஆம் திகதியன்று தீர்ப்பளித்திருந்தது.
சபையிலிருந்த கீதா குமாரசிங்க, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம், காலிக்கு அப்பால் அதிவேக நெடுஞ்சாலை ஏன் நிர்மாணிக்கப்படவில்லை என்று குறுக்கு கேள்வியையும் எழுப்பினார்.
எனினும், இதற்கு முன்னதாக எழுந்த ஆளும் கட்சியின் எம்.பியான நளின் பண்டார, ‘ நாடாளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க, தொடர்ந்து இருக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவர் சபையில் இருக்கின்றார் என சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், கீதா குமாரசிங்க தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு, இதுவரையிலும் எழுத்துமூலமாக நாடாமன்றுக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லை.
அந்த தீர்ப்பு கிடைத்ததன் பின்னர் உறுப்பினரின் பதவி குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago