2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

சரணடைந்த 58 பேராளிகள் எங்கே?

George   / 2017 மே 05 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

"உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் அருட்தந்தை பிரான்ஸிஸ் முன்னலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் 58 பேருக்கு என்ன நடந்தது" என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இன்று அவர் இதனைக் கூறினார்.

"திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை படுகொலை செய்யும் செயற்பாடுகள் வடக்கு - கிழக்கில் 2009ஆம் ஆண்டு வரை நடந்தேறின.

"யுத்தத்தின் அதியுச்ச நேரத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் சரணடையுமாறு இராணுவம் அறிவித்திருந்தது.

"பலர் அச்சத்தின் காரணமாக சரணடைந்தார்கள். தமது உறவுகளை பலர் இராணுவத்திடத்தில் ஒப்படைத்து வந்துள்ளார்கள். 

"அருட்தந்தை பிரான்ஸிஸ் முன்னிலையில், புலிகளின் முக்கியஸ்தர்களான பாலகுமாரன், அவருடைய மகன் சூரியத் தேவன், தங்கன், இளம்பரிதி, ராஜா என 58 போராளிகள் சரணடைந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? 

"பல முறைகள் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வியெழுப்பியுள்ளேன். யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை" என்றார்.


  Comments - 0

  • vinothbala Friday, 05 May 2017 11:41 AM

    இன்னும் அழுத்தம் தர வேண்டுகின்றேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X