2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

டில்ருக்ஷியின் சம்பளம் அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குவின் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஏ.பி. டில்ருக்ஷி டயஸ் விக்கிரமங்கவின் சம்பளத் திட்டம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை (21) நிறைவேறியது.

இந்தப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை நேற்று, நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதமர் அப்பிரேரணையை முன்னகர்த்தினார்.

பணிப்பாளர் நாயகத்தின் சம்பளத்திட்டம், மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் சம்பளத்திட்டத்துக்கு ஒத்திருப்பதாக அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, எரிபொருள் கொடுப்பனவு என்பனவும் அமைச்சர்களின் செயலாளர்களின் கொடுப்பனவுகளுடன் ஒத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .