2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தை முதலாவது வாசிப்புக்கென நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதன் நிமித்தம், நாடாளுமன்றத்தின் நேற்றைய நடவடிக்கைகளுக்கான ஒழுங்குபத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், அரசாங்கத்தினால் அது நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை.

1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலமாகவே குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது.

நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படுவதற்கென அந்த திருத்தச் சட்டமூலம் நேற்றைய ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், திட்டமிடப்பட்டிருந்த வகையில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன், அரசாங்கத்தின் தரப்பில் அது தொடர்பில் எதுவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படவுமில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .