2025 மே 16, வெள்ளிக்கிழமை

வகுப்பறைகளின் கவின்நிலையை உருவாக்கவும்

Gavitha   / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

'பௌதிக வளத்தை கொண்டு கல்வியை வளர்க்கமுடியாது. கல்வியை வளர்ப்பதற்கு மனித வளம் முக்கியமானதாகும். கல்விசார ஊழியர்கள் மற்றும் ஆளனி வளமும் முக்கியமானதாகும் என்பதுடன், வகுப்பறைகளில் கவின் நிலைமையை (கல்விக்கற்கும் சூழலை) உருவாக்கவேண்டும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான துரைரட்ண சிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'பௌதீக வளமும் மனித வளமும், கல்வி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இவ்விரண்டு வளங்கள் இருந்தாலும், மாணவர்கள் வந்து கற்கும் கவின்நிலை, ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழ்நிலைகளை, வகுப்பறைகளில் உருவாக்கவேண்டும்.
ஆசிரியர்களின் மனதை திருப்திப்படுத்தக் கூடிய வசதிகளை பெற்றுகொடுக்கவேண்டும். சம்பள விவகாரம் மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட பல்வேறான நல்ல சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'இதேவேளை, 13 வகுப்பு வரையிலும் கட்டாயக் கல்வி என்ற முறைமையானது, வரவேற்கத்தக்கதாகும். எனினும், நகரத்திலுள்ள சில பாடசாலைகளைத் தவிர, கிராமப்புற பாடசாலைகளில் இடைவிலகல் அதிகரித்துள்ளன. வறுமை, பொருளாதார வசதிகள், பாடசாலைகளுக்கு வந்தாலும் ஒருநாளை பூர்த்தி செய்யமுடியாத நிலைமைகள் நிலவுகின்றன' என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

'கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் வரவேற்கத்தக்கன. அதில், கட்டாயக்கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் வீட்டுச்சூழல், பெற்றோரின் நிலைமை உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.  

மாணவர்கள் பருவத்தில் இருக்கும் போதே, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம், ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு உள்ளிட்ட விடயதானங்களை கற்பிக்கவேண்டும்' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .