Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2017 மே 26 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
“இந்த நாட்டில், மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (25) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். எமது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. அதனை விடுவிக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தால் மக்கள் நிம்மதியை. இழந்துவிட்டனர். அவர்களுடைய பூர்வீக இடங்களை முப்படையினர் அபகரித்தனர். அவற்றை மீண்டும் வழங்கவில்லை. இந்த நிலைமை கடந்த 9 வருடங்களாக தொடர்கின்றது.
“காணிகளுக்கான ஆவணங்கள் இருந்தும் அவை விடுவிக்கப்படா நிலை தொடர்கின்றது. இந்த மக்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“முல்லைத்தீவு கோப்பாப்புலவு போராட்டம் 2 மாதங்களை தாண்டி தொடர்கிறது. மக்கள் தனது குழந்தைகளுடன் வீதியில் போராடுகின்றனர். அது தொடர்பில் கடந்த மாதம 17ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடப்பட்டது. 19ஆம் திகதி மக்களின் பிரதிநிதிகள் காணிகளை பார்வையிட்டனர் எனினும். அதற்கு மேல் முன்னேற்றம் எதுவும் இல்லை.
“மகாவலி “என்“ வலயம் என்ற பெயரில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகள் கைப்பற்றப்பட்டு அங்கு வெலிஓயா என்ற பெயரில் பிரதேச சபை உருவாக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு எமது இடம் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.
“எமது மக்களின் மீன்பிடி நடவடிக்கைக்கு இராணுவம், கடற்படை தடையாக உள்ளதுடன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு அவர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்.
“இந்த நிலை மாற்றமடைய வேண்டும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என அரசாங்கத்திடம் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
47 minute ago
53 minute ago