Freelancer / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகங்களில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தைகள் திங்கட்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
துணுக்காய்,மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலகங்களில் சமூர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கிலான சந்தைகளே ஆரம்பித்துவைக்கப்பட்டன.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் அபிமானி விற்பனை சந்தையினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆரம்பித்துவைத்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் க.விமலநாதன் மற்றும் மாவட்ட சமூர்த்தித்திணைக்கள பணிப்பாளர் மற்றம் பிரதே செயலாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான விளையாட்டுப்போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் கலந்துகொண்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் சான்றிதழும்,நினைவுச்சின்னமும் மாவட்டஅரசாங்க அதிபரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .