2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..

Freelancer   / 2023 ஜூன் 13 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதன்படி இந்த மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்து 200 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.

 

இதன்படி  இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 5 இலட்சத்து 46 ஆயிரத்து 686 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.

 

கடந்த 08 நாட்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்தே அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ரஸ்யா  ,சீனா ,கனடா ,அமெரிக்கா, மாலைத்தீவு ,பிரான்ஸ் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X