2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பஸ்ஸில் மோதி மாணவன் பலி

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்கஹவெல்ல  பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த மாணவன் பஸ்ஸில் மோதிய நிலையில் இன்று காலை விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொல்கஹவெல ரத்மல்கொட கல்லூரியில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வழியில் கொழும்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதியுள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X