2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

மின் கம்பத்துடன் மோதி இளைஞன் பலி

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரகாகொட - தீயகடுவ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயகடுவ, நியகொடவெவ பகுதியை சேர்ந்த, ஹோரண பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயதுடைய நிர்மான் தாரக குமார விஜேசிங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மத வழிபாட்டு நிகழ்வு (பின்கம) ஒன்றில் கலந்துகொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்திலிருந்த தொலைபேசி கம்பமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .