2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குசல் - அவிஸ்க சதம் விளாசினர்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  -  மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர் சதம் விளாசியுள்ளனர். 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அணித்தலைவர் திமுத் கருணாரட்ன, குசல் ஜனித் பெரேரா ஆகியோர், 0, 1 என்ற ஓட்ட எண்ணிக்கைகளில் ஆட்மிழந்திருந்தாலும்,  அவர்களை தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய குசல் மெண்டிஸ், அவிஸ்க பெர்ணான்டோ ஆகிய இருவரும் சதம் விளாசினர். 

இவ்விரும் ஆட்டமிழக்கமால் 213 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டதோடு, குசல் மெண்டிஸ் 119 பந்துகளில் 119 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்ணான்டோ 123 பந்துகளில் 127 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

அத்தோடு குசல்  மெண்டிஸ் 3 வருடங்களுக்கு பின்பே சதம் விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .