Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 29 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் சூப்பர் ஸ்டார்விளையாட்டு கழகத்தின் 38வதுஆண்டுநிறைவைமுன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி புதன்கிழமை (28) திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது .
இறுதிப் போட்டியில் திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணியும் விநாயகபுரம் மின்னொளி அணியும் மோதின.
இரவு பகல்ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டி இரவு 10.30 மணி அளவில் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் சூப்பர் ஸ்டார் அணி தண்டனை உதை மூலம் வெற்றியை தன தாக்கிக் கொண்டது.
இந்த போட்டிக்கு திருக்கோவில் பிரதேச சபையின் எதிர்கால தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு சாம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார். இரண்டாவது இடத்தை பெற்ற விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழகத்தையும் அவர் பாராட்டி இருந்தார்.
வி.ரி.சகாதேவராஜா
14 minute ago
18 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
46 minute ago
53 minute ago