2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரகாசித்த புத்தளம் ஆசிரியர்களுக்கு வரவேற்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்
சர்வதேச திறந்த மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி
கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி
போதனாசிரியர்கள் இருவருக்குமான மகத்தான வரவேற்பு வைபவம் புத்தளம் நகரில் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் புத்தளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

உயரம் பாய்தல் போட்டியில் ஆசிரியர் எம்.எம்.எம். ஹுமாயூன் தங்கப்பதக்கத்தையும், அவரது
சகோதரர் ஆசிரியர் எம்.எப்.எம். துபைல் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடத்தைப்

பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று சாதனை நிலைநாட்டி இருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .