2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

மாலைத்தீவு கரப்பந்தாட்டக் கழகத்தில் மலையகப் பெண்

Kogilavani   / 2021 மார்ச் 28 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

பதுளை - ஹாலிஎல, ஸ்பிரிங்வெலி தோட்ட மேமலைப் பிரிவில் வசிக்கும் ஜெயராம் திலக்ஷனா, மாலைதீவு கரப்பந்தாட்டக் கழகம் ஒன்றில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காலியில் கடந்த மாத இறுதியில் இடம்பெற்ற கெலக்ஸி கிண்ணத்துக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கரப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மேமலை தோட்டத்தைச் சேர்ந்த திலக்ஷனா மற்றும் ஸ்ரீசாந்தி ஆகியோர் விளையாடினர்.

இதன்போது சிறப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக்ஷனா, மாலைதீவு கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகம் ஒன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகம் ஒன்றில் விளையாட ஒப்பந்தமான முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையை, இவர் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள திலக்ஷனாவின் பாடசாலைப் பயிற்சி ஆசிரியரும் வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலயத்தின் தற்போதைய உப அதிபருமான என்.சுந்தர்ராஜ், 'மலையகத்தின் புரட்சி, லயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு, திலக்ஷனா சிறந்த முன்னுதாரணம்' என்றார்.

'இவர், 2012ஆம் ஆண்டில் நான் அளித்த பயிற்சியினூடாக, மேமலை தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட அணிக்கு விளையாடி, பல வெற்றிகளுக்குக் காரணமானார். இவரது வளர்ச்சி, மலையகத்துக்கு முன்னுதாரணமாக இருப்பதையிட்டு பெருமை அடைகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .