2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

காரைதீவு விவேகானந்தாவை வென்ற அட்டாளைச்சேனை லக்கி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 25 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்துக்கும், காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான இருபதுக்கு - 20 கடினபந்து கிரிக்கெட் போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வென்றது.

காரைதீவு கனகரட்ணம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற லக்கி அணி முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சமீர் 3, அறூஸ் 2, சஜான் 2, சஜாத் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 130 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்கி அணி, 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.  துடுப்பாட்டத்தில், றிஸ்னி சரப் ஆட்டமிழக்காமல் 58 (40), சஜான் 26 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சர்மா 2, டினா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, றிஸ்னி சரப் தெரிவானார்.

லக்கி விளையாட்டுக் கழகம் கடினபந்து கிரிக்கெட்டில் தனது கன்னிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .