2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

யாழை வென்ற களுத்துறை சுப்பர் பைட்டர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 28 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என். ஜெயரட்ணம் 

யாழ். சதுரங்க விளையாட்டுக் கழகம், களுத்துறை சுப்பர் பைட்டர் சதுரங்க விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான சிநேகபூர்வ இணைய விரைவு சதுரங்கப் போட்டியில் சுப்பர் பைட்டர் வென்றது.

இந்த கொரோனா பெருந் தொற்று காலங்களில் சதுரங்க விளையாட்டு வீரர்களிடையே காணப்படும் மன உளைச்சலை போக்கி சுறுசுறுப்பாக அவர்களின் திறமைகளை மேம்பட்டுத்திக் கொள்வதற்கும் மற்றும் இரு கழகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும் மேற்படி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

சுப்பர் பைட்டர் சதுரங்க விளையாட்டுக் கழகம் இணையம் மூலம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஏழு சுற்றுக்களைக் கொண்ட  இப்போட்டியில் தினோத் அபேரத்ன 7/7 புள்ளிகளைப் பெற்று ஆண்கள் பிரிவில்  வென்றார். இரண்டாமிடத்தை யாழ். சதுரங்க விளையாட்டு கழகத்தைச்  சேர்ந்த டி. அன்பரசன் கைப்பற்றினர்.

பெண்கள் பிரிவில் பியூமி உத்பலா 4/6 மதிப்பெண்களுடன் அதி சிறந்த வீராங்கனையாகவும், யாழ். சதுரங்க விளையாட்டு கழகத்தின்  வைஷ்ணவி சிவாஸ்கரன் அதி சிறந்த  இரண்டாம் நிலை  வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .