2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

எப்.எஸ்.கே. மியான்டாட் பிறீமியர் லீக் அறிமுகம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் சாய்ந்தமருது மியான்டாட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எப்.எஸ்.கே மியான்டாட் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப அறிமுக நிகழ்வுகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கழகத்தின் தலைவர் ஏ. பாயிஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

மருதூர் வொரியர்ஸ், மாளிகா யுனைட்டெட், சாந்தம் சலஞ்சர்ஸ், பொலி லயன்ஸ் ஆகிய நான்கு அணிகள் மோதவுள்ள எப்.எஸ்.கே மியான்டாட் பிறீமியர் லீக் தொடரின் கழக உரிமையாளர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வில் கழக சீருடைகளை அறிமுகம் செய்து வைத்ததுடன், வெற்றி கிண்ணங்களும், பரிசில்களும், தொடரின் கொடியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், மியான்டாட் விளையாட்டுக் கழக லீக் தொடர் தலைவர் எஸ்.எம். அமீர், தவிசாளர் எம்.ஜே.எம். காலித் அடங்கிய நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இத்தொடரில் நான்கு அணிகள், ஏழு போட்டிகள் என இம்மாதம் 19, 20ஆம் திகதிகளில் சாய்ந்தமருது வெலிவோரியன் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .