Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக் புதிய கால்பந்தாட்ட தொடரைப் புத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் லிவர்பூல், விம்பிள்டன், போல்டன், நியூ ஸ்டார்ஸ், த்ரீ ஸ்டார்ஸ், யாழ். முஸ்லிம் யுனைட்டட், நியூப்ரண்ட்ஸ், ட்ரிபிள் செவன், ஒடிடாஸ், பேர்ல்ஸ், எருக்கலம்பிட்டி ஆகிய 11 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளன.
பிரதி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா இரு போட்டிகள் வீதம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
சகல போட்டிகளும் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் தேசிய போட்டிகள் அனைத்தும் பிற்பகலில் நேரகாலத்தோடு ஆரம்பிக்கப்படுவதால் அதற்கு புத்தளம் அணிகளையும் தயார் படுத்தும் பொருட்டே ஒரு நாளைக்கு தலா இரு போட்டிகளை
நடாத்தத் தீர்மானித்ததாக லீக் தலைவரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் பிற்பகல் 2.30 க்கு ஒரு போட்டியும் மாலை 4.30 க்கு ஒரு போட்டியும் நடைபெறும்.
சம்பியன், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களுடன் முறையே 30 ஆயிரம்,15 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதாகவும் லீக் தலைவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025