Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான T20 தொடரின் முதல் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 134 ஓட்டங்களால் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
முதல்கட்டமாக T20 தொடரின் முதல் போட்டி அடிலைட் நகரில் நேற்று (27) ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை T20 அணியின் தலைவரான லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கினார்.
இப்போட்டிக்கான இலங்கை அணி, அணித்தலைவர் லசித் மாலிங்கவுடன் குசல் மெண்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் விளையாடினர்.
இலங்கை அணி
குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ குசல் ஜனித் பெரேரா, ஒசத பெர்ணாந்து, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, லக்ஷன் சந்தகன், நுவன் பிரதீப், கசுன் ராஜித, லசித் மாலிங்க (அணித்தலைவர்)
மறுமுனையில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மிக நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் நட்சத்திர துடுப்பாட்டவீரர்களான டேவிட் வோனர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அணிக்கு மீண்டும் அழைத்திருந்தது.
அவுஸ்திரேலிய அணி
ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோனர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், அடம் ஷம்பா தொடர்ந்து நாணயச் சுழற்சிக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களான அணித்தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் தொடக்கத்தை வழங்கினர். இதில், ஆரோன் பின்ச் T20 சர்வதேச போட்டிகளில் பெற்றுக்கொண்ட 10ஆவது சதத்தோடு வெறும் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களை பெற்றார்.
பின்ச் இன் விக்கெட்டினை அடுத்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த கிளென் மெக்ஸ்வெல்லுடன் இணைந்து டேவிட் வோனர், அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர்.
இரண்டு வீரர்களும், அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்துக்குள் கிளென் மெக்ஸ்வெல் தான் T20 சர்வதேச போட்டிகளில் பெற்றுக்கொண்ட 7ஆவது அரைச்சதத்தினையும் பூர்த்தி செய்தார்.
இதனை அடுத்து, டேவிட் வோனர் T20 சர்வதேச போட்டிகளில் பெற்ற கன்னி சதத்துடன் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்களுக்கு 233 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் டேவிட் வோனர் வெறும் 56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேநேரம், கிளென் மெக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக தசுன் ஷானக்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 234 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு இலங்கை அணி, தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த குசல் மெண்டிஸ் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலிக்க தவறினர்.
தொடர்ந்து இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் டுக்களை இழந்து வெறும் 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும், இந்த 99 ஓட்டங்கள் இலங்கை அணி T20 போட்டிகளில் பெற்ற ஐந்தாவது குறைந்த ஓட்டங்களாகவும் அமைந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுடன் தனது தரப்பு வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்ய, ஏனைய அனைவரும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் ஷம்பா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வோனர் தெரிவாகினார்.
ஸ்கோர் விபரம்
குசல் மெண்டிஸ் 1-0 (0.5), தனுஷ்க குணத்திலக்க 2-13 (3.3), பானுக்க ராஜபக்ஷ3-13 (3.4), ஒசத பெர்ணாந்து4-46 (9.2), குசல் பெரேரா 5-50 (10.3), பந்த வீச்சு:
வனிந்து ஹஸரங்க 6-71 (13.6), தசுன் ஷானக்க7-71 (14.2) , லக்ஷன் சந்தகன்8-82 (16.3) , கசுன் ராஜித9-83 (16.6),
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025