R.Tharaniya / 2025 மே 15 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க (வயது 54) , அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார்.
அமெரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அந்தஸ்தை பெற்றுக்கொள்வதற்கும் கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் நாடாக நிலைநிறுத்துவதற்கும் புபுது தசநாயக்க பல்வேறு வழிகளில் உதவினார்.
புபுது தசநாயக்க, இலங்கைக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் கனடாவுக்குச் சென்று தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கனேடிய தேசிய அணியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

29 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago