R.Tharaniya / 2025 ஜூன் 02 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 03 வெண்கலப் பதக்கங்களை வென்று வெற்றி பெற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தப் போட்டி தென் கொரியாவின் (குமி) நகரில் கடந்த மே மாதம் 27 முதல் 31 ஆம் திகதி வரை ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது .
அங்கு, கலிங்க குமாரகே 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் × 4 கலப்பு ரிலே போட்டிகளில் பங்கேற்று 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். மேலும், 400 × 4 பெண்களுக்கான ரிலே மற்றும் 400 × 4 கலப்பு ரிலே போட்டிகளில் பங்கேற்ற இலங்கை தடகள வீரர்களான நிஷேந்திர பெர்னாண்டோ, சதேவ் ராஜகருணா, சயூரி மெண்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் ஜெயேஷி உத்தரா ஆகியோர் இந்த போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இலங்கை தடகள சங்கத்தின் அதிகாரிகள், முப்படை விளையாட்டு பிரிவுகளின் அதிகாரிகள், இந்த விளையாட்டு வீரர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
டி.கே.ஜி. கபிலா


26 minute ago
28 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
55 minute ago