2025 ஜூலை 19, சனிக்கிழமை

கால்ப்பந்தாட்ட விளையாட்டு போட்டி

Freelancer   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

நோன்பு   பெருநாளை சிறப்பிக்கும் வகையில், கண்டி,  கெலிஒயா  கல்கமுவ  மத்திய  கல்லூரி  மைதானத்தில் கால்பந்தாட்ட    போட்டி   நேற்று (25)  நடைபெற்றது.   இதில் 14  கழகங்கள் பங்குபற்றி  விளையாடின.

அபராதே மற்றும்  எஸ்டன்  வில்லா  ஆகிய கழகங்கள் இறுதிச்சுற்று  போட்டியில்  விளையாடின.     அபராதே கலகம் முதலாம் இடத்தையும் . எஸ்டன் வில்லா  கலகம்  இரண்டாவது  இடத்தையும்  பெற்றுக்கொண்டது.,

வெற்றி  பெற்ற அணியினருக்கு கேடயம்  வழங்கப்பட்டு  பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.    சிறந்த  வீரரான  இல்லாம்க்கும்,  சிறந்த  கோல்ட் காப்பாளரான அல்த்தாப்க்கம் பதக்கம் அணிவிக்கப்பட்டது. .

 கண்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் முகாமையாளர்  முஜிபுர் ரஹுமான்   பிரதம  அதிதியாக  கலந்து கொண்டு  இந்த பரிசில்களை வழங்கி  வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X